ஃபர்ஸ்ட்லுக் கூட வரல… ஆனா ரூ.200 கோடி பிஸ்னஸ்… ரெக்கார்ட் செய்த வலிமை….

Published on: July 5, 2021
---Advertisement---

92c7010ca31eb1775908371cd5fff013

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை 18.10.2019 அன்று போடப்பட்டது. ஆனால், படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைய் யார் என்கிற தகவல் கூட வெளியாகவில்லை.

8aa62e2f32aea746a2975d35529c6bda

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு ‘ விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம்’ என வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

98bf88d3ac67643b0e1bf1c7f03be34e

வலிமை ஃபர்ஸ்ட்லுக் போஸரி ஜூலை 3 வாரத்தில் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும், அநேகமாக ஜூலை 15ம் தேதி அஜித்தின் செண்டிமெண்டான  வியாழக்கிழமை வருவதால் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு சேர்த்து மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வலிமை படத்தின் தியேட்டர் உரிமை, ஓடிடி டிஜிட்டல் உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை போன்ற அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து ரூ.200 கோடிக்கு வலிமை திரைப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எனவே, #ValimaiRecordBusiness என்கிற ஹேஷ்டேக்கில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். 

 

Leave a Comment