நேபாளத்துக்கு எதிரானப் போட்டியில் அமெரிக்க அணி வெறும் 35 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கத்துக்குட்டி அணிகளான நேபாளம் மற்றும் யு.எஸ்.ஏ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி வீரர்கள் நேபாள பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகிக் கொண்டு இருந்தனர்.
அமெரிக்க அணியின் சேவியர் மார்செல் 15 ரன்கள் இரட்டை இலக்கைத் தொட்டார். நேபாளத்தைச் சேர்ந்த பவுலர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அமெரிக்க அணி மொத்தமே 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 35 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணி 5.2 ஓவர்களில் வெற்றி இலக்கை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து 36 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43 ரன்கள் குறைந்தபட்ட ரன்களாகும். இப்போது அந்த மோசமான சாதனையை அமெரிக்கா பிடித்துள்ளது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…