கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த நிகழ்வு என அல்லு அர்ஜுனன் கைது படலத்தை கூறலாம். கிட்டத்தட்ட இந்தியாவே உற்று கவனிக்கும் அளவிற்கு இந்த கைது படலம் மாறியது. வீட்டுக்குள் சென்று அவரை கைது செய்த போலீஸ் ஜாமீன் கிடைத்தும் ஒருநாள் சிறையில் வைத்திருந்து தான் வெளியே விட்டனர்.
இதையடுத்து இந்திய பிரபலங்கள் பலரும் இதற்கு பொங்க, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டம் அனைவருக்கும் சமம் என ஒரு காட்டு காட்டினார். ஆனாலும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அவர் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறார்.
நடந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் காரணமில்லை என்றாலும் இந்த நிகழ்வு எல்லோருக்கும் ஒரு பயத்தை உண்டு பண்ணி விட்டது என்பது தான் நிஜம். இந்தநிலையில் அல்லு அர்ஜுனிற்காக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் நிரஞ்சன் ரெட்டி இதற்காக வாங்கிய தொகை குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. அந்தவகையில் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 5 லட்சம் அவர் கட்டணம் வாங்கியிருக்கிறார்.
புஷ்பா 2 வசூலில் 1000 கோடி ரூபாயை கடந்து சாதனை புரிந்து வருகிறது. இந்த லாபத்தில் அல்லு அர்ஜூனுக்கும் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்பதால் இந்த தொகை எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த கைது படலம் மூலமாக புஷ்பா 2 படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்து விட்டது. எந்தவகையில் பார்த்தாலும் இது படக்குழு, அல்லு அர்ஜுன் இரு தரப்புக்குமே லாபமாக தான் முடிந்துள்ளது.
