ஏற்கனவே ரெண்டு… இதுல டிக்டாக்ல வேற ஒன்னா? – மனைவியை தவிக்க விட்டு சென்ற கணவன்!

Published on: February 14, 2020
---Advertisement---

ad9195c6b1cc2ebbd46f02b04f8c84cc

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓட்டுனரான முரளிதரன் என்பவர் டிக்டாக் மூலம் பழக்கமான பெண்ணுடன் வாழ்வதற்காக மனைவியை தனியாக தவிக்க விட்டு சென்றுள்ளார்.

டிக்டாக்கில் அதிக ஆர்வம் கொண்ட ஓட்டுனர் முரளிதரன், நடனத்திறமை மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு டிக்டாக்கில் கதாநாயகன் போல உலாவந்துள்ளார். இந்நிலையில் இவரது வீடியோக்களைப் பார்த்து திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அவரோடு டூயட் பாடல்களுக்கு வீடியோ போடும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளனர்.

இது இப்படியிருக்க முரளிதரனுக்கு திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டதால் குடும்பத்தார் ஒருப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த மனைவிக்குத் தெரியாமல்தான் முரளி டிக்டாக்கில் ஜாலியாக உலாவர ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவரங்கள் எல்லாம் முரளியின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்குத் தெரியவர, அனைவரையும் அப்படியே நடுவீதியில் விட்டுவிட்டு டிக்டாக் காதலியை திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்துள்ளார் முரளிதரன். இதனை அடுத்து கணவரை மீட்டுத்தர சொல்லி போலிஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துள்ளார் முரளியின் மனைவி.

Leave a Comment