கிளம்பு கிளம்பு அந்துபோச்சு கிளம்பு கிளம்பு…ஆல்யா மானசா போட்ட செம குத்து (வீடியோ)…

விஜய் தொலைக்காட்சியில் வெளியான சீரியல்களில் நடித்து சீரியல் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஆல்யா மானசா. இவரின் நடிப்புக்கும், குழந்தை குரலுக்கும் ரசிகர்கள் உருவாகினர். சீரியலில் சின்னய்யா சின்னய்யா என அவர் அழைத்தது பலருக்கும் பிடித்துப்போனது. இதை தொடர்ந்து, அத்தொடரில் அவருடன் நடித்த நடிகர் சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். தொடர்ந்து தனது மகளின் நிகவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

பிரசவத்துக்கு பிறகு மீண்டும் பழைய அழகுக்கு திரும்ப உடற்பயிற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார். தற்போது மீண்டும், ராஜா ராணி தொடரின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.சமீபகாலமாக திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளம்பு கிளம்பு அந்துபோச்சு கிளம்பு கிளம்பு பாடலுக்கு செமயாக ஸ்டெப் போட்டு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram