சந்திரமுகி 2 வில் நான் இருக்கிறேனா? நடிகை ஜோதிகாவின் பதில்!
சந்திரமுகி 2 படம் லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள நிலையில் அதில் தான் நடிக்கிறேனா என நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு ரஜினி எந்தளவு காரணமோ அதே அளவு ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் காரணம். தனது திருமணத்துக்கு முன்னதாக அந்த படத்தில் நடித்த அவர், அதன் பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது நடித்து வருகிறார். விரைவில் அவர் நடிக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதையொட்டி நேர்காணல்கள் அளித்து வரும் அவர் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் தான் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அந்த படம் பற்றி யாரும் தன்னுடன் பேசவில்லை என்று கூறிய ஜோதிகா, தான் அதில் நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 வில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.