’தளபதி 65’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

Published on: January 20, 2020
---Advertisement---

6d19653ab0f53c2b9463c24611a55135

விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் திரையுலகில் மில்லியன் டாலர் கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் அட்லி, வெற்றிமாறன், மோகன்ராஜா, உள்பட ஒரு சில இயக்குனர்கள் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பேரரசு, விஜய்யின் 65வது படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது வெளிவந்த தகவல்கள் கூறுகின்றன

அதிரடி ஆக்ஷன் கதை ஒன்றை விஜய்க்காக தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த கதை விஜய்க்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும்  பிடித்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment