
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இதனை அடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஐந்து நிமிடத்திற்கு ஒரு அப்டேட் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இணைந்திருப்பதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்
முதல் இரண்டு அறிவிப்புகளே ஆச்சரியமான அறிவிப்பாக இருப்பதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி விஜய்யின் தந்தையும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் விஜய் ரசிகர்களும் குஷியாகியுள்ளனர். இன்னும் அடுத்தடுத்து என்னென்ன அறிவிப்புகள் வரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Maanaadu #SAchandrasekar @vp_offl pic.twitter.com/4j4d5NJbTk
— sureshkamatchi (@sureshkamatchi) January 16, 2020