அமேசான் பிரைமையே அசர வைத்த தனுஷ்!.. சூடு பிடிக்கும் NEEK பட வியாபாரம்!..

by சிவா |
அமேசான் பிரைமையே அசர வைத்த தனுஷ்!.. சூடு பிடிக்கும் NEEK பட வியாபாரம்!..
X

NEEK Movie: தமிழ் சினிமாவின் முக்கியமான வியாபாரமாக அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் மாறிவிட்டது. அதற்கு காரணம் கொரோனா ஊரடங்கின் போது தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்ததுதான். தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதால் பல படங்கள் நேரிடையாக ஓடிடி சேனல்களில் வெளியானது.

ரசிகர்களும் ஓடிடியில் படம் பார்க்க துவங்கினார்கள். சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று போன்ற படங்கள் ஓடிடியில் நேரிடையாக ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படமும் ஓடிடியில்தான் வெளியானது. புதிய படங்களை வாங்குவதில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே போட்டியும் உருவானது.

இதனால் புதிய படங்களை மிகவும் அதிகவிலை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்கியது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்தியேட்டரில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களை 80 கோடி, 90 கோடி என விலை பேச பெரிய நடிகர்களின் தங்களின் சம்பளத்தையும் ஜெட் வேகத்தில் உயர்த்தினார்கள்.

ஆனால், ஒருகட்டத்தில் ஓடிடியில் படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட படங்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களின் மீது வைத்த விலையை பாதியாக குறைத்துவிட்டார்கள்.

ஆனாலும், கிடைக்கும் வரை லாபம் என தயாரிப்பாளர்களும் அதை வாங்கி கொள்கிறர்கள். இதில் லால் சலாம் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடியில் பல மாதங்கள் போனி ஆகாமல் இருந்தது. மேலும், முன்பெல்லாம் புதிய படங்களை பார்க்காமல் விலை பேசி வந்த ஓடிடி நிறுவனங்கள் இப்போது பிஸ்னஸ் கட் என சொல்லப்படும் படத்தை பார்த்த பின்னரே படங்களை வாங்குவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது இரண்டரை மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் மட்டும் காட்டுவார்கள்.

அதுபோல தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தின் பிஸ்னஸ் கட்டை பார்த்த அமேசான் படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டியதோடு, ‘இதற்கு பின் கதை என்னவாகும்?’ என்றெல்லாம் ஆர்வமாக விசாரித்தார்களாம். அதோடு, இந்த படத்தை நல்ல விலை கொடுத்து நாங்களே வாங்கி கொள்கிறோம் என சொல்லி விட்டார்களாம். எனவே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் அமேசான் பிரைமில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த படம் தியேட்டரில் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story