More

விஜய் சேதுபதியால் டென்ஷனான அமீர் கான்… இதுதான் காரணமா?

ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி வரும் லால்சிங் சத்தா படத்தில் அமீர் கான் சீக்கியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கடந்தாண்டு டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா சூழலால் தள்ளிப்போனது. 

Advertising
Advertising

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அமீர் கான் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி உடல் எடையைக் கூட்டி விட்டதாகவும், அதனால் அமீர் கான் அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால், லால்சிங் சத்தா படத்திலிருந்து விஜய் சேதுபதி கழற்றிவிடப்பட்டிருப்பதாகச் சொல்கின்றன இந்தி ஊடகங்கள். அதேபோல், செல்போனுக்குத் தான் அடிமையாகிவிட்டதாகவும், அதனால் வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் அமீர் கான் நினைப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, லால்சிங் சத்தா ரிலீஸ் வரை போனை ஆஃப் செய்து வைக்க அமீர் முடிவெடுத்துவிட்டதாகவும் தெரிகிறது. அதேபோல், சோசியல் மீடியா பக்கமும் அவர் வருவதைக் குறைத்துக் கொண்டார். 

Published by
adminram

Recent Posts