பாதியில் நிறுத்தப்பட்ட படத்தை மீண்டும் இயக்குகிறார் அமீர்.. படம் வேற லெவலில் இருக்கும்.!

by adminram |

3211c2bb58fd01953e4bfcebeea5b7d8

இன்றைய தமிழ் சினிமா உலகில் டாப் இயக்குனர்கள் என்று பார்த்தால் கண்டிப்பாக முதல் 10 இடங்களில் இருப்பவர்கள் இயக்குனர் பாலுமஹேந்திராவின் சிஷ்யர்களாகத்தான் இருப்பார்கள். இவரிடம் உதவி இயக்குநர்களாகள் இருந்த பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி என அனைவருமே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்கள்.

இதில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கியவர் அமீர். காதல் கதையை மையமாகக்கொண்டு இப்படத்தை எடுத்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றிப்பாடல்களாக அமைந்தது.

இதையடுத்து ஜீவாவை வைத்து ராம் என்ற படத்தை இயக்கியிருந்தார் அமீர். இப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. இதன்பின் கார்த்தியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி 'பருத்திவீரன்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

ac81e5423737869e215083d83bf40ca3
sandana devan

அதிலும் குறிப்பாக, சிறந்த நடிகை, சிறந்த எடிட்டர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் இந்திய அரசின் தேசிய விருதை வென்றது. இதன்பின் 6 ஆண்டுகள் கழித்து 'ஆதி பகவன்' படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை.

இதன்பின் நடிப்பில் கவனம் அமீர் "வட சென்னை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பின் ஆர்யா, அதிதி மேனனை வைத்து 'சந்தனத்தேவன்' என்ற படத்தை இயக்க தொடங்கினார். ஆனால், இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே 35 நாட்கள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்தார் அமீர். இவர் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேசியதால்தான் பைனாஸ் பிரச்னை ஏற்பட்டு படம் பாதியில் நின்றதாக கூறப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Next Story