திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்தாண்டு அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்திய சினிமாவின் தந்தை என அறியப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பெயரால் இந்திய திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்த ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விருது பெற்ற கலைஞர்களுக்கு விருதினை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அளித்தார்.ஆனால் அமிதாப்பச்சன் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.
இதுதொடர்பாக அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தொடர் காய்ச்சலால் அவதிப்படுவது தன்னால் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை’ என வருத்தம் தெரிவித்துள்ளார். விருது பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் வரும் 29ஆம் தேதி தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். அப்போது அமிதாப்பச்சனுக்கு அந்த விருது அளிக்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
Dhanush SK: …
தமிழ் தெலுங்கு…
நடிகை திரிஷா…
Biggboss Tamil:…
நடிகை நயன்தாரா…