நாகர்கோவில் அருகேயுள்ள கருங்கல் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்சாண்டர் (46). இவர் வெளிநாட்டில் சிறிது காலம் கொத்தனராக பணிபுரிந்து சமீபத்தில் இந்தியா திரும்பினார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.
இதை அறிந்த அப்பெண்ணின் மகன் ஜவகர் தனது நண்பர் சுனிலுடன் சேர்ந்து அலெக்சாண்டை பல முறை எச்சரித்துள்ளார். ஆனால், அலெக்சாண்டர் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதோடு, கள்ளக்காதலியின் மகள்கள் இருவரையும் தனது காம இச்சைக்கு பயன்படுத்த துவங்கினார். தாயுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதோடு, தங்கைகளிடமும் அலெக்ஷாண்டர் இப்படி நடந்ததால் கோபத்தின் உச்சுக்கே சென்ற ஜவஹர் அவரை கொலை செய்வது என முடிவெடுத்தார்.
அதன்படி, கடந்த 27ம் தேதி புங்கரைகுளங்கரை பகுதியில் அலெக்சாண்டர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்த சில வாலிபர்கள் அவர் முகத்தில் மிளகாய் பொடியை வீசினர். அதன்பின், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஜவஹர், அவரது நண்பர் சுனில் உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏ ஆர்…
Biggboss Tamil:…
பிக்பாஸ் தமிழ்…
ஏ ஆர்…
தமிழ் சினிமாவில்…