More

‘அனபெல் சேதுபதி’ அந்த மாதிரியான படம் அல்ல… பதறி விளக்கம் கொடுத்த இயக்குனர்….

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தனது கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி.  தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

அதில் ஒரு திரைப்படம்தான் அனபெல் சேதுபதி. விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’. இது ஒரு ஹாரர் காமெடி வகை திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி என இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்  சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தராஜன் இயக்கியுள்ளார். மேலும், ராதிகா, யோகிபாபு, ஜகபதி பாபு என ஒரு நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படக்குழு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில் பேசிய அப்படத்தின் இயக்குனர் தீபக் ‘இப்படம் முழுமையான பேய் படம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. இது ஹாரர் காமெடியும் இல்லை. அனபெல் சேதுபதி ஒரு ஃபேண்டஷி காமெடி திரைப்படம். நீங்கள் குடும்பத்துடன் ஏன் குழந்தைகளுடன் பார்க்கும் படிதான் காட்சிகளை அமைத்துள்ளோம். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம்’ என தெரிவித்தார். மேலும், இப்படத்தின் கதையை நான் எனது தந்தையிடம் கூட விவாதிக்கவில்லை. ஒரு திரைப்படத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை நான் இயக்குனர் ஏல்.ஏ. விஜயிடம் உதவியாளராக பணிபுரிந்துதான் தெரிந்து கொண்டேன் என அவர் கூறினார்.

Published by
adminram

Recent Posts