Connect with us

ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனைவி

ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனைவி

இந்தியா திரும்பி, படங்களில் நடிக்க விரும்பிய ஆனந்த கண்ணன், புற்றுநோய்க்கு பலியானதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

2f7a31e74d453c4a33162287929f8699

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல வி.ஜே.ஆனந்த கண்ணன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். 2008-ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 

புற்றுநோயுடன் போராடி வந்த அவர், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது சொந்த நாடான சிங்கப்பூரில் காலமானார். 48 வயதில் ஆனந்த கண்ணன் மறைந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

f89ecb8464bd0e2a7196a646ef7da417

மரணப்படுக்கையில் இருந்த ஆனந்த கண்ணன், தான் இறந்து விட்டால், தனது குடும்பத்தினர் யாரும் அழ வேண்டாம் என்றும், தன்னை மகிழ்ச்சியாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும், அவரது குடும்பத்தினரும் இதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

இந்தியா திரும்பி, படங்களில் நடிக்க விரும்பிய ஆனந்த கண்ணன், புற்றுநோய்க்கு பலியானதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

0d71ddb3aadce44448a0f637de9a352f-2
 

Continue Reading
To Top