டிடியை செருப்பால் அடித்த நபர்... வைரலாகும் வீடியோ!
திரைப்பட கதாநாயகி போன்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. இவர் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், நயன்தாரா , ஜோதிகா என பல கோலிவுட் நட்சத்திரங்களில் ஆரம்பித்து பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் வரை பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
பிரபலங்கள் திக்குமுக்காடும் அளவிற்கு அவர்களுடன் நெருங்கிய தோழி போன்று அசாதாரணமாக பேட்டி எடுத்து மக்களை பிரம்மிக்க செய்திடுவார். தொழில் முறையில் சிறந்து விளங்கும் டிடிக்கு வாழ்க்கை பாதியிலே முடிந்துவிட்டது காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தொடர்ந்து தனது கேரியரில் உச்சத்தில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் அண்மையில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நடனமாடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்போது எதிரில் ஒரு செருப்பு அவர் மீது பறந்தது. ரீல் பண்ண நினைந்த டிடிக்கு செருப்பால் பலமான அடி விழுந்தது. ரீல் சரியாக வரவில்லை என்றாலும் அவர் எதிர்பார்த்தை விட இந்த வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோயோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணலாம்.