சூர்யா நடித்து தயாரித்து வரும் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சூர்யா நீண்டகாலமாக ஒரு ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார். அதற்காக தான் இப்போது நடித்துக் கொண்டு இருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தை நம்பி இருக்கிறார். இந்த கதை மேல் உள்ள நம்பிக்கையால் அவர் இந்த படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தை சிறப்பாக இயக்கியுள்ள சுதா கொங்கரா அடுத்ததாக விஜய்யை இயக்கப் போகிறார். இப்படி சூரரைப் போற்று திரைப்படத்துக்கு நிறைய நேர்மறையான வணிக அம்சங்கள் கூடி வந்துள்ள நிலையில் இப்போது மற்றொரு நற்செய்தியும் வெளியாகியுள்ளது.
அதுவென்னவென்றால் ரிலிஸுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமை விலைப் பேசப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் குணீத் மோங்கா இதற்கான உரிமைகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Lucky Bhaskar:…
தனது வருங்கால…
Rajinikanth: தமிழ்…
நடிகர் திலகம்…
நடிகர் பிரதீப்…