
பாடகியான ஆண்ட்ரியா கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே தன்னை திறமையான நடிகை என நிரூபித்து அசத்தியவர்.

எனவே, வாய்ப்புகள் அவர் கதவை தட்டியது. ஆனாலும், கெத்தான, தைரியமான பெண் வேடங்களே அவரை அதிகம் தேடி வந்தது. விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களே அதற்கு சாட்சி. துப்பறிவாளன் திரைப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் அசத்தியிருந்தார்.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு2 திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. ஒருபக்கம் அழகான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பிகினி உடையில் கடற்கரையில் கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், தூரத்தில் நின்று போஸ் கொடுத்ததால் அவரின் அழகை க்ளோசப்பில் பார்க்க முடியாமல் ஏமாந்து போயுள்ளனர் நெட்டிசன்கள்.