இன்னும் கொஞ்சம்தான்!...மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுவும் துணிச்சலான பெண் வேடம் என்றால் இவரை இயக்குனர்கள் அழைக்கிறார்கள்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாகவும் ஆண்ட்ரியா பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் சிறிய மேலாடை மட்டும் அணிந்து மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.