நடிகையின் அம்மாவால் மார்க்கெட்டை இழந்த அங்காடித்தெரு நடிகர்…..

வெயில் திரைப்படத்தை இயக்கிய வசந்தபாலன் அடுத்து இயக்கிய திரைப்படம் அங்காடித்தெரு. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் சென்னையில் உள்ள துணிக்கடைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படமாக அப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் கதாநாயகனாக மகேஷ் அறிமுகமானார். அவருக்கும், அஞ்சலிக்குமான காதல் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. எனவே, அங்காடித்தெரு மகேஷ் என அவர் நினைவு கூறப்பட்டார்.

மளமளவென அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. பெரிய இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க விரும்பினர். ஆனால், ஒரு நடிகையின் அம்மா தன் மகளுடன் 2 படங்கள் நடிக்கும் படி கூறி ரூ.50 லட்சத்தை அவரின் கையில் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒரு படம் நடித்த உடனே ரூ.50 லட்சமா? என வாயை பிளந்த மகேஷ் அவரின் மகளுடன் 2 படங்களில் நடித்தார். ஆனால், அந்த ஹீரோயின் மகேஷுக்கு அக்கா போல் இருந்ததோடு, படங்களும் ஊத்திக்கொண்டது. எனவே, அத்தோடு மகேஷின் மார்க்கெட்டும் முடிந்துவிட்டது.

தற்போது அவசரப்பட்டு ரூ. 50 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சினிமா வாழ்க்கையை கெடுத்துக்கொண்டேன் என புலம்பி வருகிறாராம் அங்காடித்தெரு மகேஷ்….

Published by
adminram