காருக்குள் அப்படி ஒரு போஸ் கொடுத்த 16 வயது நடிகை அனிகா

தமிழ் சினிமாவில் குட்டி நட்சத்திரங்களை ஓரம்கட்டி குயின் நடிகையாக கொடிக்கட்டி வளர்ந்து வருபவர் நடிகை அனிகா. மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் என்னை அறிந்தால், நானும் ரெளடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்தார்.

மலையாள ஹீரோ நடிகர் மம்முட்டியின் மகளா தி காட் பாதர் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததை அடுத்து விசுவாசம் படத்திலும் மகளாக நடித்தார்.

விசுவாசம் படம் இளம் நடிகைகளுக்கு கொடுக்காத அங்கீகாரத்தை அனிகாவிற்கு கொடுத்தது. ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதால் இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஹுட் எடுத்து வெளியிட்டார்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாகவும், மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார். சில நாட்களாக போட்டோஹுட் பக்கம் செல்லாமல் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வரும் அனிகாவில் காருக்குள் இருந்து மயக்கும்படியாக பார்த்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram