பிகில் படத்தை பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை: ஆனந்த்ராஜ் அதிர்ச்சி பேட்டி

by adminram |

300095ce6186b5e44eab451815bb22ae

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு நடிகர் ஆனந்தராஜ். அவரே இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். இவர் இந்த படத்திற்காக பல நாட்கள் கால்சீட் கொடுத்ததாகவும் ஒரு சில படங்களை தவிர்த்து விட்டு பிகில் படத்தில் நடித்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் பிகில் படம் ரிலீஸானபோது ஆனந்தராஜ் நடித்த காட்சிகள் மிக சொற்ப அளவே இருந்தன. இதனை கேள்விப்பட்ட ஆனந்தராஜ் மனம் வெறுத்து அந்த படத்தை பார்ப்பதையே தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரே உறுதி செய்துள்ளார்.

அந்த பேட்டியில் பிகில் படம் குறித்து கூறியபோது, ‘பிகில்’ ரிலீஸ் ஆனவுடன் நான் கேள்விப்பட்டவை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. அதனால் அந்த படத்தைத்தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் இனிமேலும் பார்க்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு திறமையான நடிகரை நாட்கணக்கில் நடிக்க வைத்துவிட்டு கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளையும் நீக்குவது சரியா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது

Next Story