நயன்தாரா கூட ஒரு டான்ஸ் ஆடிக்கிறேன் ப்ரோ... விக்னேஷ் சிவனிடம் கெஞ்சிய அனிருத்!

by adminram |

7b1271002161dbf1dfa7eff25d2184b8-1

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் டூ டூ டூ ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாவது சிங்கிள் நாளை விக்கியின் பிறந்தநாளில் வெளியாகிறது. இந்த பாடலில் நயன்தாராவுடன் அனிருத் ஒரு நடனமாடி இருக்கிறாராம்.

81db1e82bc5088619137b9681bb71da1

இதனை விக்னேஷ் சிவனே தெரிவிக்க நீங்க ஏன் பெர்மிஷன் கொடுத்தீங்க என பலரும் கேட்க துவங்கிவிட்டனர். அனிருத் நயனுடன் நடனமாட இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்திருப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Next Story