இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி!.. அனிருத்தை பார்த்து கடுப்பான கமல்ஹாசன் ஃபேன்ஸ்.. ட்விஸ்ட்!

by Saranya M |

இந்தியன் 2 படத்துக்கு முன்பாக அனிருத் இதுபோல ட்வீட்டை போடவில்லை என அப்போதே அனிருத் இந்தியன் 2வின் ரிசல்ட்டை மறைமுகமாக கூறிவிட்டார் என கடுமையான விமர்சனங்களை கமல்ஹாசன் ரசிகர்கள் முன் வைத்து வந்தனர்.

அனிருத் பொய் சொல்லாமல் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். இந்தியன் 2 படத்துக்கு இந்தளவுக்கு அவர் இசையமைத்ததே பெரிய விஷயம் தான் என்றும் ஷங்கர் சுமாரான கதையை சொல்லி அவரை நோகடித்தால் மனுஷன் என்ன பண்ணுவார் என அவருடைய ரசிகர்கள் சப்போர்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள தனுஷின் ராயன் படத்துக்கு அனிருத் வின்னர் கோப்பைகளை போட்டு ஃபயர் விட்டது போன்ற ஒரு ட்வீட்டை பார்த்து கமல்ஹாசன் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். மேலும், சீக்கிரமே தனுஷுடன் இணைந்து படம் பண்ணப் போவதாகவும் பதிவிட்டதை பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

ஆனால், அது அனிருத்தின் ஐடியே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அனிருத் பெயரில் டூப்ளிகேட்டாக ஃபேக் ஐடியை உருவாக்கி நெட்டிசன் ஒருவர் கமல்ஹாசன் ரசிகர்களை கதறவிட்டுள்ளார்.

தனுஷின் ராயன் படத்துக்கு இண்டஸ்ட்ரியில் இதுவரை பெரிதாக எந்தவொரு சிறப்பான பேச்சுகளும் அடிபடவில்லை என்று கூறுகின்றனர். நாளை படம் வெளியானால் தான் படத்துக்கு விமர்சனங்கள் எப்படி அமையும் என தெரியவரும்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Next Story