வாய்ப்பு கிடைச்சதும் ஓகே சொல்லிட்டேன்: சீ.வி .குமாரின் திரைப்படத்தில் அனிதா சம்பத்!

செய்தி வாசிப்பாளினியாக தொலைக்காட்சிகளில் தனது கேரியரை துவங்கி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரீட்சியமனார். அதையடுத்து பிபி நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சீ.வி .குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் திரைப்படமான ஜாங்கோ திரைப்படத்தில் அனிதா சம்பத் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலுபிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அனிதா சம்பத், எனக்கு படவாய்ப்புகள் வந்தால் என்னுடைய கதாபாத்திரம் குறித்து ஆராய்ந்து பின்னர் தெளிவான முடிவெடுப்பேன். ஆனால், இது சி.வி.குமார் திரைப்படம் என்றதுமே எந்தவித தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்து விட்டேன்.  அதுமட்டுமல்லாமல் ஜிப்ரான் இசையில் இத்திரைப்படம் உருவாகிறது என்பதால் எனக்கு கூடுதல் நம்பைக்கை உண்டானது.

Published by
adminram