இது ரொம்ப ஓவர்யா!…அனிதாவை கிண்டலடித்த நடன இயக்குனர் – பொங்கியெழுந்த கணவர்

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் வாழ்வில் கடந்த பாதைகளை கூறினர். அப்போது, சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை செய்தியாளர் அனிதா சம்பத் சோகத்துடன் கூறியிருந்தார். மேலும், பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது முதலே கண்ணீர் விட்ட படியே இருக்கிறார்.

இந்நிலையில், நடன இயக்குனர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அனிதா  கதை ரொம்ப ஓவர்..  அதில் எமோஷனும் இல்லை.. சோகமும் இல்ல..கொஞ்சம் அமைதியா இருங்க’ என பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அனிதாவின் கணவர் பிரபாகரன் ‘பசினா என்னன்னு தெரியுமா? அப்டி வளர்ந்திருந்தா அடுத்தவன் பசி என்னன்னு புரியும்.. இப்படித்தான் அடுத்தவன் அன்பு வைச்சா பசியையும் வலியையும் கூட கிண்டல் பண்ண தோணும். நடன இயக்குனர்னா டேன்ஸ் ஆடலாம் டா.. ஆணவத்துல ஆடாதீங்க..’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram