லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2004ம் வருடம் வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தை மும்பையை சேர்ந்த UTV நிறுவனமும், லிங்குசாமியும் இணைந்து தயாரித்திருந்தனர். புரமோஷன் விழாவில் ‘ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல சூர்யாவுக்கு அஞ்சான் அமையும்’ என பில்டப் கொடுத்து ஹைப் ஏற்றினார் லிங்குசாமி. ஆனால் காட்சிக்கு காட்சி சூர்யாவை பில்டப் செய்து கொண்டே இருந்ததால் இந்த படம் பொதுவான ரசிகர்களை கவரவில்லை. எனவே படத்தை கடுமையாக ட்ரோல் செய்தார்கள்.
முதன்முதலில் சமூகவலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் என்கிற வரலாறும் அஞ்சானுக்கு உண்டு. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில்தான் இந்த படத்தை ரீ-ரீலீஸ் செய்ய திட்டமிட்ட லிங்குசாமி படத்தின் மொத்த 3 மணி நேர நீளத்தை 2 மணி நேரமாக குறைத்து படத்தையே புதுவிதமாக மீண்டும் எடிட் செய்து உருவாக்கினார்.
நவம்பர் 28ஆம் தேதியான இன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றது. சூர்யா ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்த படம் இன்று வெளியாகவில்லை.
பிரச்சனை என்னவென்றால் UTV நிறுவனம் தயாரித்த எல்லா படங்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு கொடுத்து விட்டார்களாம். தற்போது அவர்களின் அனுமதியின்றி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதால் இந்த படத்தை வெளியிடும் தியேட்டர்களில் வெளியிடும் கியூப் நிறுவனத்திற்கு ஜியோ நிறுவனம் ஒரு இ-மெயில் அனுப்ப படத்தை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டது கியூப் நிறுவனம்.
ஏற்கனவே இந்த படத்தை 35 கோடிக்கு வாங்கி தமிழகத்தில் வெளியிட்டதில் லிங்குசாமியின் சகோதரர் சந்திரபோஸுக்கு பல கோடி நஷ்டம். தற்போது ரீ-ரிலீஸிலும் படம் வெளியாகவில்லை என்பதால் கோபமடைந்த லிங்குசாமி தரப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…