Anjaan: மாதவனை வைத்து ரன் விஷாலை வைத்து சண்டக்கோழி போன்ற அதிரடியான ஆக்சன் படங்களை இயக்கிய லிங்குசாமி சூர்யாவை வித்து இயக்கி 2014ம் வருடம் வெளியான திரைப்படம் அஞ்சான். ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல சூர்யாக்கு அஞ்சான் அமையும் என ஊடகங்களில் பேட்டி கொடுத்தார் லிங்குசாமி. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் விழாவில் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்துல இறக்கி இருக்கேன்’ என்றும் சொல்லியிருந்தார். படத்தை இயக்கியதோடு அவரே சொந்த காசை போட்டு இப்படத்தை தயாரித்தும் இருந்தார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படி பல பில்டப்புகளுக்கிடையே வெளியான அஞ்சான் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. சூர்யாவை ஓவர் பில்டப் செய்வது போல இருந்த காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்த படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். சூர்யாவும் லிங்குசாமியும் ‘தயவுசெய்து இந்த படத்தை ட்ரோல் செய்யாதீர்கள்’ என கெஞ்சுமளவுக்கு நிலைமை போனது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் படம் பாக்ஸ் ஆபிஸிலும் தோல்வியடைந்தது. லிங்குசாமிக்கு பல கோடி நஷ்டமும் ஏற்பட்டது.
இந்த படத்தின் தோல்வி லிங்குசாமியை கடுமையாகவே பாதித்தது. அதனால் இப்போது வரை அவரால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. சமீபகாலமாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ரீ-ரீலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் அஞ்சான் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் லிங்குசாமி. அதேநேரம் முன்பு நடந்த தவறு இப்போது நடக்கக்கூடாது என யோசித்த லிங்குசாமி 3 மணி நேர படத்திலிருந்து ஒரு மணி நேர காட்சிகளை தூக்கிவிட்டு இரண்டு மணி நேரமாக குறைத்து ஷார்க் ஆக்கியிருக்கிறார். அதோடு படத்தை புதிதாக எடிட் செய்து படத்தையே மாற்றி இருக்கிறாராம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் திரையிட்டும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது படம் பார்த்த சூர்யா ரசிகர் படம் சிறப்பாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். கண்டிப்பாக படம் பார்க்கும்போது அஞ்சான் இப்போது எடுத்த ஒரு புதிய படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கொடுக்கும்.. பழைய அஞ்சான் உங்களுக்கு நினைவுக்கே வராது என படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
எனது அஞ்சான் ரீலீஸ் கண்டிப்பாக சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் லிங்குசாமி இருக்கிறார். ஒரு பக்கம் சூர்யா இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. வெளியூரில் இருப்பதால் விரைவில் படத்தை பார்க்கிறேன் என சொல்லி இருக்கிறாராம். நவம்பர் 28ம் தேதியான நாளை அஞ்சான் தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகவுள்ளது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…