அந்த நடிகை வேண்டாம்...அஞ்சலியை புக் செய்த ஷங்கர்....அதுதான் காரணமாம்!...

by adminram |

ee4ea53219d7e7af44fcda08210c9e29

இந்தியன் 2 திரைப்பட பஞ்சாயத்து ஓய்ந்துள்ள நிலையில் ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜிடமிருந்து பெற்றுள்ளார் ஷங்கர். இதற்காக அவருக்கு ரூ.2 கோடி கொடுக்கப்பட்டது. இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள ஷங்கர் பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

b8b90b5efca2b20ce37ff543a939aaeb

இந்த படம் அரசியல் தொடர்பான கதை எனவும், இப்படத்தில் ராம்சரண் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும், இப்படத்தில் கியாரா அத்வானி நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு வேடத்திற்கு ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ அவர் நடிக்கவில்லை. எனவே, அவர் வேண்டாம் என முடிவெடுத்த ஷங்கர் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளாராம்..

ed99d73930def7177923145b72116368

அஞ்சலி திறமையான நடிகை மற்றும் ராஷ்மிகா மந்தனா அளவுக்கு சம்பளமும் கேட்க மாட்டார். எனவே, அவரை ஷங்கர் தேர்ந்தெடுத்துள்ளார். அதோடு, அஞ்சலிக்கு இதில் முக்கிய வேடமாம். 2 ராம்சரண் எனில் ஒருவருக்கு கியாரா அத்வானியும், மற்றொருவருக்கு அஞ்சலியும் ஜோடியாக நடிப்பார்கள் என கருதப்படுகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக மாறியிருக்கும் தமன் இசையமைக்கவுள்ளார்.

fd81fdd1ad4b6fbfc3d49d41da0cf5af-2

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. 7 மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நடிப்பவர்கள் விபரத்தை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

Next Story