More

என்னால வர முடியாது!.. அண்ணாத்தே படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, ரஜினி சென்னை திரும்பினார். தற்போது 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் துவங்கியதாக செய்திகள் வெளியானது.

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இப்போது படப்பிடிப்பு வேண்டாம் எனவும், ஏப்ரல் மாதம் துவங்குவோம் என ரஜினி கூறிவிட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Published by
adminram