முதன் முறையாக பேய் படத்தில் விஜய் சேதுபதி - அனபெல் சேதுபதி டிரெய்லர் வீடியோ

by adminram |

f981d7e64407832b61c1d98ef3b63c8d-3

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தனது கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

அதில் ஒரு திரைப்படம்தான் அனபெல் சேதுபதி. விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’. இது ஒரு ஹாரர் காமெடி வகை திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி என இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தராஜன் இயக்கியுள்ளார். மேலும், ராதிகா, யோகிபாபு, ஜகபதி பாபு என ஒரு நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story