அப்ப ஹீரோ விஜய் சேதுபதி இல்லையா? - ‘அனபெல் சேதுபதி’ டிரெய்லர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்....

by adminram |

3ff4ad2077fe0344ecee0f38bcf1dd3f

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தனது கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

a77b3beb33473eed3287e9c5069c7c40
annabelle sethu

அதில் ஒரு திரைப்படம்தான் அனபெல் சேதுபதி. இப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு, ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது ஒரு ஹாரர் காமெடி வகை திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி என இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தராஜன் இயக்கியுள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

c567538d4420d3505bf50add517dd5e4-3
annabelle sethu

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், டிரெய்லரின் முதல் காட்சியில் மட்டுமே விஜய் சேதுபதி வருகிறார். அதன்பின் எந்த காட்சியிலும் அவர் காட்டப்படவில்லை. டாப்ஸி, யோகிபாபு, ராதிகா ஆகியோரின் காமெடி காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை என்பது தெரியவருகிறது. மேலும், ஒரு சிறிய வேடத்தில் மட்டுமே அவர் நடித்துள்ளார் என நம்பப்படுகிறது. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Next Story