எஸ்பிபி குரலில் அண்ணாத்த பாடல்- மறைந்த பின்னரும் தொடரும் ராசியான கூட்டணி!
தமிழ் சினிமாவில் ஒருபடம் வெளியனால் சில ஜோடிகள் சேர்ந்து நடித்தால் ஹிட் அடிக்கும் மற்றும் வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைத்தால் படம் ஹிட் அடிக்கும் என்பது போல பல அதிர்ஷடங்களை மக்கள் நம்பி படம் பார்க்க செல்வார்கள். ஆனால் இங்கு, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் புதிய படத்தில் இன்ட்ரோ சாங் எஸ்பிபி பாடினால் அந்த படம் ஹிட் என பெரிதும் நம்பினார்.
அதேபோல் ரஜினி படத்திற்கு எஸ்பிபி அறிமுக பாடலை பாடினால் அந்த படம் ஹிட் என வழக்கமானதாக நம்பப்பட்டது. இந்த வெற்றி காம்போவுக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் எஸ்.பி.பி யின் மரண மாஸ் பாடல் மரண ஹிட் அடித்தது.
அதே போல் எஸ்பிபி இந்த மண்ணை விட்டு பிரிந்தபோதிலும் அவரின் குரல் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அறிமுக பாடலாக ஒலிக்க இருக்கிறது. ஆம், எஸ்பிபி இறப்பதற்கு முன்னரே ரெகார்ட் செய்யப்பட்ட இந்த பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். எனவே அண்ணாத்தே மரண ஹிட் அடிக்கும் என அடித்து சொல்லலாம்.