இந்த ஆண்டின் முதல் சந்தானம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on: January 10, 2020
---Advertisement---

fae1273264464175b36689a466c76f82-1

நடிகர் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ மற்றும் ’சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராக இருந்தும் இந்த படங்கள் இன்னும் ரிலீசாகாமல் உள்ளன. இந்த நிலையில் சந்தானம் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’டகால்டி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

முதல் முறையாக இரண்டு வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு வெளியாகும் சந்தானத்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ’ஏ1’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ’டகால்டி’ படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் ஜோடியாக ரித்திகாசென் நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். விஜய் நரேன் இசையமைப்பில் தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Comment