
காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் ஒரு பாடலை பாடினார் என்று செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை சதீஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சதீஷை அடுத்து இன்னொரு காமெடி நடிகரான ரோபோ சங்கரும் ஒரு பாடலை பாடியுள்ளார்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ’கன்னிமாடம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில்தான் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். ஹரிசாய் கம்போஸ் செய்த இந்த பாடலை ரோபோ சங்கர் மிக அருமையாக பாடி உள்ளதாகவும் இந்த பாடல் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருப்பதாகவும் இந்த பாடல் இன்று மாலை யூடியூபில் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதன்முதலாக பாடகராக மாறியுள்ள ரோபோ சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது