குழந்தைகள்  ஆபாசப்படம் பார்த்த மற்றொரு நபர் கைது: 8 ஆண்டு பழக்கத்தால் வந்த வினை!

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராகி உள்ளதாகவும் விரைவில் அது சம்மந்தமான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதையடுத்து குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இது போல கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞரும் இந்த பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரீஷ்,11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிகிறது. அவரது செல்போனில் 500 க்கும் மேற்பட்ட ஆபாசப்படங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் தமிழகத்தில் இந்த பிரிவில் முதன் முதலாகக் கைது செய்யப்பட்ட திருச்சியைச் சேர்ந்த அல்போன்ஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram