More

83 வயதிலும் மாஸ் காட்டும் அந்தோனி ஹாப்கின்ஸ் – இதோ இன்னோரு ஆஸ்கர்!….

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடம் உலகமெங்கும் உருவாகும் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியல் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

சிறந்த படமாக ‘ நோமேட்லாண்ட்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தை இயக்கிய சீன இயக்குனர் ‘க்ளோயி சாவ்’ சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார். இப்படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இப்படத்திற்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்துள்ளது.

அதேபோல், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பழம் பெரும் நடிகர் ஆண்டனி ஹாப்கின்ஸ் தட்டி சென்றுள்ளார். ‘The Father’ படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  

ஆண்டனி ஹாப்கின்ஸ் ஹாலிவுட்டில் 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். அசால்ட்டாக நடிப்பில் அசத்தும் ஒரு மாபெரும் நடிகர். ஏற்கனவே ‘The silence of the Lamps’ படத்திற்கு ஆஸ்கர் விருது வாங்கியவர். அப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்தால் உங்கள் உடல் நடுங்கும். இவர் நடித்த பல திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளது. 60க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.  தற்போது 83 வயதில் மீண்டும் ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளார். இவருக்கு உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts