கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. ஒருபக்கம் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவரை டீம் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வருகிறது. அடுத்து ஆதிக் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் அஜித். அந்த பட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படத்தின் பட்ஜெட் 300 கோடி என்பதால் தயாரிப்பாளர் மட்டும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. அஜித் சில நாட்களுக்கு முன்பு ஒரு வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு முழு பேட்டி கொடுத்தார். அனுபமா சோப்ரா என்கிற பிரபல பத்திரிக்கையாளர் அந்த பேட்டியை எடுத்தார்.
அந்த பெட்டியில் அஜித் மனம் விட்டு பல விஷயங்களை பேசினார். விஜயின் அரசியல் பிரவேசம், ஒரு நடிகனாக தான் இழந்த விஷயம், ரசிகர்களின் மனப்பான்மை என பல விஷயங்களை பேசினார். குறிப்பாக ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அதில் பேசியிருந்தார். மேலும், மோட்டார் ரேஸில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றெல்லாம் கூறினார். இந்நிலையில் இந்த பேட்டியை எடுத்த அனுபமா சோப்ரா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
நான் துபாய் சென்று அஜித் சாரை பேட்டி எடுத்தேன். என் அருகில் என்னுடைய மேக்கப் மேன் இருந்தார். ஆனால் அஜித் தனியாக வந்திருந்தார். அதோடு அவருக்கு மேக்கப் மேன் என்று கூட யாரும் இல்லை. அது எனக்கு அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது. ஏனெனில் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் அவரே எளிமையாக இருக்கும் போது நாம் ஏன் இதை எல்லாம் செய்கிறோம் என்று எனக்கு தோன்றியது என பேசி இருக்கிறார்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…