More

நம்ம பொம்மி இவ்வளவு அழகாக பாடுவாரா? – வைரல் வீடியோ

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியாகியுள்ள ’சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் சுதா கொங்கரா இயக்கம், சூர்யாவின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை என பாராட்டிய பலரும், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபர்ணா பாலமுரளியின் நடிப்பையும் பாராட்டியிருந்தனர்.

Advertising
Advertising

கணவரின் ஆசை, கனவு, லட்சியத்தை புரிந்து கொண்டு அவருக்கு தோள் கொடுக்கும் வகையில் அவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே, கடந்த சில நாட்களாகவே பொம்மி போல் தங்களுக்கு மனைவி வேண்டும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கதறி வந்தனர். பல மீம்ஸ்களும் உலா வந்தது.

இந்நிலையில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என அவர் பாடும் பாடல் வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதை பார்க்கும் போது அபர்ணா இவ்வளவு அழகாக பாடுவாரா? என நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடையும் அளவுக்கு அவரின் குரல் இனிமையாக அமைந்திருந்தது.

இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts