சூப்பர் ஹிட்டான சத்யராஜ் கவுண்டமணி காம்போ.. இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் எது தெரியுமா?

Published on: March 18, 2025
---Advertisement---

பெஸ்ட் காம்போ: இந்த காம்போ எப்பொழுதுமே ரசிகர்களுக்கு பிடித்தமான காம்போப்பா என சினிமாவில் ஹீரோ ஹீரோயின் ஜோடிகளை பற்றி பேசுவார்கள். அதற்கு இணையாக ஒரு ஜோடியை பற்றி மக்கள் பேசினார்கள் என்றால் அது சத்யராஜ் மற்றும் கவுண்டமணி காம்போதான். இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். சத்யராஜ் படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் கவுண்டமணி இருக்க மாட்டார்.

கவுண்டருக்கு ஃபேவரைட்: டபுள் ஹீரோ சப்ஜெக்ட் மாதிரிதான் படமுழுக்க சத்யராஜுடனேயே டிராவல் செய்வார் கவுண்டமணி. இருவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் அந்த கோவை லொள்ளு என்பது பிறவியிலேயே இருந்த ஒன்று. அது படங்களிலும் பயன்படுத்தினார்கள். ஏன்ப்பா இந்த பாவமான மூஞ்சிய எங்கப்பா வாங்குனா என சத்யராஜை பார்த்து கவுண்டமணி கேட்பதில் இருந்து நிறைய கவுண்டர்கள் இவர்கள் படத்தில் இருக்கும்.

முதல் படம்: சத்யராஜின் நூறாவது படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை படத்தில் கவுண்டமணி தனியாளாக மேலோட்டமான நகைச்சுவை நடிகராக 1989 ஆம் ஆண்டில் நடித்தார். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில் வெளியான வாழ்க்கைச் சக்கரம் படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள். முதல் படமே இவர்களால் பெரிய அளவில் பிரபலமடைந்தது. அதற்கடுத்த படியாக பிரம்மா, முறைமாமன், நடிகன், மலபார் போலீஸ் என பல படங்கள் இவர்களின் காம்போவில் வெற்றியடைந்த படங்கள்.

அதில் நடிகன் திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி ஏற்கனவே சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நீ இந்தப் பெண்ண இதுக்கு முன்னாடி பார்த்ததில்லல. உலக மகா நடிப்புடா சாமி என்ற வசனத்தை சத்யராஜ்தான் கவுண்டமணியை பேச சொல்லியிருக்கிறார். அதை போல கேப்மாரி , மொள்ளமாரி எல்லாம் சேர்த்து வைத்த ஒருத்தன் என்று நான் தான் என்னை பார்த்து பேச சொன்னேன் என்றும் சத்யராஜ் கூறியிருப்பார்.

ஆஃப் ஸ்கிரீன் கவுண்டர்: ஆன் ஸ்கிரீன் கவுண்டர் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்க்ரீன் கவுண்டர் அடிப்பதிலும் சிறந்தவர் கவுண்டமணி. நாயை பார்த்து இதுக்கு பேர் என்ன கேட்டதற்கு நாய்க்கு பேர் நாய்தான் என சொன்னதாகட்டும், ஏன்ப்பா எல்லாரும் நடிக்க வந்துட்டா யார்தான் சினிமா பார்க்குறது என சந்தானத்திடம் கேட்ட கேள்வியாகட்டும் கவுண்டருக்கே பொறந்தவராக கவுண்டமணி திகழ்ந்து வருகிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment