சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதோடு சிம்புவை வைத்து படத்தின் புரமோ வீடியோவையும் இயக்கினார் வெற்றிமாறன். கலைப்புலி தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை என அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் சம்பள விஷயத்தில் சிம்பு ஏழரையை கூட்ட அந்த புரமோஷன் வீடியோவே வெளியாகவில்லை.
அதன்பின் வெற்றிமாறனின் முயற்சியில் கலைப்புலி தாணு சமாதானம் அடைய பிரமோ வீடியோ வெளியானது. அதேநேரம் இப்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்த சிம்பு ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
தக் லைப் படத்திற்கு பின் கடந்த பல மாதங்களாகவே சிம்பு துபாயில் இருக்கிறார். மேலும், லண்டனுக்கும் அவர் சென்று வருகிறார். அரசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் மட்டுமே அவர் இந்தியாவுக்கு வருவார் என்கிற நிலையில் இப்போது வரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை.
இந்நிலையில்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ கால் மூலம் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை சிம்புக்கு பிடித்து போய்விட விரைவில் சென்னை வந்து முழு கதையையும் கேட்கிறார் என சொல்லி இருக்கிறாராம். முருகதாஸ் இயக்கத்தின் சிம்பு நடிக்கப் போனால் அரசன் படம் என்னவாகும் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்திருக்கிறது.
ஏற்கனவே பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அது டிராப் ஆனது. இப்போது வெற்றிமாறன் படமும் டிராப் என்றால் சிம்பு ரசிகர்கள் சோர்வடைந்துவிடுவார்கள். ஆனால், அரசன் படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் 8ம் தேதி கோவில்பட்டியில் துவங்கவுள்ளது. அந்த படத்தை முடித்த பின்னரே சிம்பு முருகதாஸ் படத்தில் நடிக்கப் போவார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். வெற்றிமாறன் படம் துவங்குமா? இல்லை முருகதாஸ் படம் டேக்ஆப் ஆகுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…