குண்டாக இருப்பதால் மகள் முன்பு அசிங்கப்பட்டேன் - அரவிந்த் சாமி
என்ன தான் சாக்லேட்பாய் பல பேர் வந்தாலும், நிஜமான சாக்லேட்பாய் நம்ம அரவிந்த்சாமி தான். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் அறிமுகமானார். அதன்பின் மணிரத்னத்தின் செல்ல பிள்ளை போல அடிக்கடி அவர் படங்களில் நடித்தார். ரோஜா, பம்பாய், கடல், தற்போது செக்க சிவந்த வானம் என பர படங்களில் நடித்துள்ளார்.
அதை தவிர பல படங்களில் நடித்துள்ளார். இடையில் சினிமாவை விட்டு விலகி இருந்த அரவிந்த் சாமி மன உளைச்சலில் இருந்தார். பின் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் மூலம் ஹெவியான கம்பேக் கொடுத்தார். தற்போது தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று 51வது பிறந்தநாள் கொண்டாடும் அரவிந்த்சாமி, சினிமா துறையில் இருந்து விலகி இருந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவருக்கு இரண்டு மனைவிகள். 2010 ஆம் ஆண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
கசப்பான அனுபவங்களை அவர் கூறுகையில், “நான் ஒரு காலத்தில் குண்டாக இருந்தேன்…அப்போது 110 கிலோ இருந்து இருப்பேன், ஒரு முறை, இலங்கையில் என் மகளுடன் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது என்னை யாரென்று தெரியாத ஒருவர்,என் மகளிடம், உன் அப்பாவை கம்மியாக சாப்பிட சொல் என்றார்.
எனக்கு அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் சின்ன பொண்ணான அவளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்” என தனது ஆதங்கத்தை உருக்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.