நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் இறங்கிவிட்டார், ரஜினிகாந்தும் விரைவில் அரசியல் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
ஒரு பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்து மட்டும் இருந்தால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நினைத்து அரசியலில் நுழையக் கூடாது. ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும், தன் கீழ் உள்ளவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும், ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நுட்பம் வேண்டும்
ஒரு புகழ் பெற்ற நடிகர் என்பதாலும், ஒரு ஹீரோவாக வெற்றி பெற்றார் என்பதாலும் ஒரு சிறந்த ஆட்சியை அவரால் கொடுக்க முடியும் என்று எப்படி நம்புவது? அவர்கள் அரசியல் குறித்து நிறைய படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு அரசை நடத்தக்கூடிய அனுபவம் அவர்களுக்கு வரும். பெரும் ரசிகர் கூட்டம் இருந்தால் மட்டும் ஆட்சியை பிடித்து ஒரு நல்ல அரசை வழங்க முடியாது.
குறிப்பாக ரஜினி, கமல் மற்றும் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்கள் என்னென்ன திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள், அவர்கள் அறிவிக்கும் திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியுமா என்பதை பார்த்து தான், நான் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வேன்
நான் ரஜினி அல்லது கமல் ரசிகன் என்பதாலும், விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதாலும் உடனே நான் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன். யாரும் அதனை செய்யக்கூடாது. ஒரு அரசை திறம்பட யாரால் நடத்த முடியும் என்பதை அவர்களுடைய செயல் வழியாக தெரிந்து அதன் பின் முடிவு செய்ய வேண்டும் என்று அரவிந்தசாமி கூறியுள்ளார்.
அரவிந்த்சாமியின் இந்த கருத்து ரஜினி, கமல் அரசியலை மறைமுகமாக தாக்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…