தனி ஒருவன்:
2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியானது. இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன் ,ஹரிஷ் உத்தமன், நாசர் என பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
கதையின்படி ஐபிஎஸ் அதிகாரியான மித்ரன் சட்டவிரோதமாக மருத்துவ நடைமுறைகளை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தும் ஒரு பணக்கார விஞ்ஞானியான சித்தார்த் அபிமன்யுவை கைது செய்ய விரும்புகிறார். இதுதான் இந்த படத்தில் மையக்கருத்து. படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்றது.
பாராட்டை பெற்ற படம்:
2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இதில் சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருப்பார். மித்ரன் கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருப்பார். படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இயக்கம், திரைக்கதை, கதைக்களம், ஜெயம் ரவி மற்றும் தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பிற்காக இந்த படம் பாராட்டப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரவிந்த் சுவாமி பெரிய அளவில் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்தப் படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் தனி ஒருவன் திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் தனி ஒருவன் திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என அரவிந்த்சாமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தெலுங்கில் நல்லாவே இல்லை:
அதாவது இதே படத்தை தெலுங்கில் துருவா என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. தெலுங்கிலும் அரவிந்த்சாமி தான் நடித்திருப்பார். ஆனால் ஜெயம் ரவி கேரக்டரில் ராம்சரண் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தைப் பற்றி அரவிந்த்சாமி கூறும் போது இந்த படத்தை திரும்ப தெலுங்கில் நடிக்கும் போது நல்லாவே இல்லை.
ஏனெனில் ஒரு கேரக்டரை நம்ம பண்ணும் போது அதை அப்பப்போ கிரியேட் பண்றோம். அப்பப்போ தோன்ற விஷயங்களை இதில் சேர்க்கிறோம். அதைப் பார்த்துவிட்டு அதே மாதிரி திரும்ப வேண்டும் என்று சொன்னீங்கன்னா அது ரொம்ப கஷ்டம் .எனக்கு முதல் டேக் மற்றும் இரண்டாம் டேக் ஒன்றாக இருக்காது. இதே மாதிரி தெரியாத பாஷையில் பேசுவதும் எனக்கு சௌகரியமாக இல்லை என அரவிந்த்சாமி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…