பிக்பாஸிற்கு புது வரவு.. யாருன்னு தெரியுதா? டமால் டுமாள் சண்டை ரெடி..

by adminram |

e6ea7c03a5adb88c523e19dee73344db

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸின் முதல் எலிமினேஷனுக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் யார் வெளியேறுவார் என இனிமேல்தான் தெரிய வரும். இதற்கிடையில், தற்போது விஜே அர்ச்சனா விரைவில் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறார் என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ரீசன்ட் போஸ்ட்கள், அவரது குடும்பத்தை அவர் ரொம்பவே மிஸ் செய்து போஸ்ட் செய்ததை போல இருக்கிறதாம்.

மேலும் அவரது வீட்டில் யாரும் இல்லாமல், அர்ச்சனா அந்த வீட்டை தனியாக புகைப்படமும் எடுத்து பதிவிட்டுள்ளார். ஒருவேளை அவர் பிக்பாஸ் போட்டிக்காக, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனினும் இதற்கான விடை இன்னும் கொஞ்சம் நாட்களில் கிடைத்துவிடும் என நம்பலாம்.

e42e3b61edfa51265d0734aa1e290ef8

Next Story