கோட் படம் லாபமா? நஷ்டமா?!.. மனம் திறந்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி!…

Published on: March 18, 2025
---Advertisement---

Vijay Goat Movie: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். ரஜினிக்கு பின் கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வந்தவர். ஒருகட்டத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கினார்.

இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு அவருக்கு 265 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுவே என் கடைசி திரைப்படம். இனிமேல் முழுநேர அரசியல் என அறிவித்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் யாருடன் கூட்டணி அமைத்து திமுகவுக்கு டஃப் கொடுக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடமும் அவரின் ரசிகர்களிடமும் நிலவுகிறது. ஜனரஞ்சகன் படத்திற்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் விஜய்.

இந்த படம் வெளியானபோது வட மாநிலங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றில் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதற்கு காரணம் இந்த படத்தின் இறுதிக்காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புரமோட் செய்வது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. விஜயின் படங்கள் நன்றாக ஓடும் கேரளாவிலும் கோட் படம் ஓடாமல் போனதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

எனவே, கோட் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சிலர் செய்தி பரப்பினார்கள். இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டபோது கோட் படத்தின் வசூல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘கோட் படம் எங்களுக்கு லாபம்தான். ஒரு பெரிய நடிகர் படம் வெளியாகும்போது தவறான வசூலை பட தயாரிப்பு நிறுவனமே பொய்யாக வெளியிடுகிறார்கள் என்பது எங்களை போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தது. அப்படியெல்லாம் தவறான தகவலை சொல்லிவிட முடியாது.

விஜய் சார் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்கள் படம் வெளியாவதற்கு முன்பே லாபத்தை கொடுத்துவிடும். கோட் படம் எங்களுக்கு டேபிள் பிராபிட்தான். விஜய் சாருக்கு அவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகி 6 நாட்களில் எல்லோருக்கும் லாபம் கிடைத்துவிடும்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment