தளபதி 70 இருக்கா? இத யாருமே எதிர்பார்க்கலயே.. அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்

தளபதி 70: தற்போது விஜய் அவருடைய 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார் .படம் பாதி முடிந்த நிலையில் எப்படியாவது இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் ஒட்டுமொத்த பட குழுவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் அதற்கு அடுத்தபடியாக அவருடைய 70 வது படத்திலும் நடிக்க போகிறார் என்ற ஒரு தகவல் வெளியானது.
வெளியான தகவல்: ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை .இதைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டபோது அவர் சில தகவல்களை பகிர்ந்தார். பிகில் திரைப்படத்தை தயாரித்தவர் அர்ச்சனா கல்பாத்தி. அதற்கடுத்தபடியாக மீண்டும் விஜயை வைத்து அர்ச்சனா தயாரித்த படம் கோட். தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி விஜயின் தீவிர ரசிகை தான் அர்ச்சனாகல்ப்பாத்தி. இவர்தான் விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியானது.
விஜய் சொல்லவேண்டும்: இதைப் பற்றி அவர் கூறும் பொழுது விஜய் சொல்வதை பொருத்துதான் எல்லாம் அது நடக்கும். அதையும் மீறி அவருடைய படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும் .ஒருவேளை இருந்தால் அந்த படத்தை தயாரிக்கலாம் என கூறினார். அது மட்டுமல்ல அவருடைய அடுத்தடுத்த லைன் அப் என்னென்ன என்பதையும் கூறியிருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி.
அடுத்தடுத்த அப்டேட்: அதாவது பிகில் திரைப்படத்திற்கு பிறகு நாய் சேகர் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அதன் பிறகு லவ் டுடே. இந்த படத்திற்கு பிறகு காஞ்சூரியன் கண்ணப்பன். பிறகு கோட் இப்போது டிராகன் திரைப்படம். டிராகன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம். சிம்புவுக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதன் பிறகு இரண்டு சின்ன படங்களை தயாரிக்கப் போவதாகவும் தனது அடுத்தடுத்த அப்டேட் பற்றி கூறுகிறார் அர்ச்சனா கல்பாத்தி.
பெரிய படம் சின்ன படம் என்ற இல்லாமல் நல்ல கதையம்சத்துடன் படம் வந்தால் அதை நாங்கள் கண்டிப்பாக பண்ணுவோம் எனக் கூறியிருக்கிறார் .டிராகன் படம் அர்ச்சனா கல்பாத்தியின் 26 ஆவது திரைப்படமாகும். இவர் நிறுவனத்தில் வெளிவந்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த திரைப்படங்கள் .லைக்காவிற்கு எப்படி ஒரு பெயர் சினிமாவில் இருக்கிறதோ அதைப்போல ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதை நல்ல முறையில் கொண்டு சென்று வருகிறார் அர்ச்சனா கல்பாத்தி.