திருச்சி பாஜக பிரமுகர் கொலையில் ஈடுபட்டது இஸ்லாமிய தீவிரவாதிகளா ? காவல் துறை விளக்கம் !

Published on: January 28, 2020
---Advertisement---

a7c3ac86277aad5a3ceb8f823768ce10

திருச்சியில் நேற்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மத ரீதியிலான பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு நேற்று காந்தி மார்க்கெட் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிய கொலையாளிஅங்கிருந்து தப்பித்துவிட்டார். படுகாயமடைந்த விஜயரகு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக மிட்டாய் பாபு என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர் பாஜக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன பொன் ராதாகிருஷ்ணன்’இந்த கொலைக்குக் காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்’ எனக் கூறினார்.

இவரைப் போலவே மற்ற தமிழக பாஜக தலைவர்களும் கொலையில் ஈடுபட்டது இஸ்லாமிய தீவிரவாதிகள் எனவும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து இதற்கு விளக்கமளித்த ஐஜி அமல்ராஜ் ’எங்கள் விசாரணையில் மதத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. மூன்று பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரையும் விரைவில் கைது செய்வோம்’. எனக் கூறியுள்ளார்.

Leave a Comment