ஹீரோவா நடிச்சாலும் அஜித்தான் முக்கியம்.. அர்ஜூன் தாஸ் பண்ணக் கூத்த கேளுங்க
பொதுவாக ஹேண்ட்ஸம் ஹீரோக்களை பார்த்தால் தான் இளம்பெண்கள் ஜொள்ளு வடிப்பார்கள். ஆனால் முதன்முறையாக ஒரு வில்லனைப் பார்த்து ஜொள்ளு வடித்திருக்கிறார்கள் என்றால் அது நடிகர் அர்ஜுன் தாஸ் மீது தான். கைதி படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். அவருடைய பேஸ் வாய்ஸ் தான் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.
கணீர் குரல் பொதுவாக யாரையும் இம்ப்ரஸ் செய்யாது. ஆனால் அர்ஜுன் தாசின் இந்த பேஸ் வாய்ஸ் அனைவரையும் இம்ப்ரஸ் செய்தது .இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதில் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். பெண்கள் அதிக அளவு விரும்பும் நடிகராகவும் அர்ஜுன் தாஸ் இருக்கிறார். ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறார்.
தற்போது ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதியில் சின்ன மாற்றம் செய்திருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தான்.
ஏனெனில் அந்தப் படத்தில் மெயின் வில்லனே அர்ஜுன் தாஸ் தானாம். அதனால் அந்தப் படத்திற்காக இவருடைய கெட்டப்பில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம் .ஒன்ஸ்மோர் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு இருக்கிறதாம். அதனால் இதில் நடித்து முடித்து விட்டு குட்பேட்அக்லி படத்திற்கு போங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் .
ஆனால் உடனே கெட்டப்பை மாற்ற முடியாது என்பதால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டாராம் அர்ஜுன் தாஸ். இதனால் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குட்பேட்அக்லி திரைப்படத்தில் வில்லன் கேரக்டர் தான். ஆனால் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். என்னதான் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தாலும் அஜித் படம் தான் முக்கியம் என அங்கு உட்கார்ந்து இருக்கிறார் அர்ஜுன் தாஸ். இதற்கிடையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்திலும் அஜித்திற்கு சப்போர்ட் செய்யும் விதமாக அங்கு சென்று இருந்தார் அர்ஜுன் தாஸ்.