சிவகார்த்திகேயனை கைவிட்ட ‘ஹீரோ’.... பெயரை தட்டிச் சென்ற அர்ஜூன்...

499f480a2397e1e3a9baf96bf2c1eb44

சீமத்துரை, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் தோல்விக்கு பின் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த கதை ‘ஹீரோ’. சூப்பர் ஹீரோ கதையான இப்படத்தை ‘இரும்புத்திரை’ இயக்குனர் மித்ரன் இயக்கியிருந்தார். எனவே,இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆனால், படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் படத்தில் சிவகார்த்திகேயன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. சூப்பர் ஹீரோவுக்கான எந்த காட்சிகளும் இதில் இல்லை. சிவகார்த்திகேயனை விட அர்ஜூனின் கதாபாத்திரம் வலுவாக இருப்பதாகவும், அவர் நன்றாக நடித்திருப்பதாகவும், அவர் வந்த பின்னரே படம் சூடு பிடிக்கிறது, சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார் என அர்ஜூனையே அதிகம் பாராட்டுவதை பார்க்க முடிந்தது.

தோல்வி அடந்த மாணவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை. அவர்களிடம் திறமை இருக்கும் என்பதுதான் இப்படத்தின் அடிநாதம். இந்த ஒற்றை வரி கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை பலவீனமாக இருப்பதால் படம் ஈர்க்கவில்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
மொத்தத்தில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனை விட அர்ஜூன் பெயரை தட்டிச்சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story